ADDED : ஜன 17, 2024 12:39 AM
ஐஸ் ஹவுஸ், தந்தையை வெட்டிய ரவுடியை, 20 ஆண்டுகளுக்கு பின் பழிக்கு பழியாக கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உட்பட ஆறு பேரை போலீசார் திருவண்ணாமலையில் கைது செய்தனர்.
புளியந்தோப்பை சேர்ந்த ரவுடி மாதவன், 52 மீது, பல்வேறு வழக்குள் உள்ளன. இவர், ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி. சில தினங்களுக்கு முன், ஐஸ் ஹவுஸ் பகுதியில், மாதவனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து தப்பியது.
இதுகுறித்து, ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரித்து, புளியந்தோப்பையை சேர்ந்த பில்லா சதீஷ், 30, அவரது தம்பி முரளி, 27, தந்தை கிருஷ்ணன், 50 மற்றும் விக்ணேஷ், 27, பாபு 30, முகேஷ், 24 ஆகிய ஆறு பேரை திருவண்ணாமலையில் கைது செய்தனர்.
மாதவன், அவரது நண்பர் ஆலி சுரேஷ் உள்ளிட்டோர், 2001ல் கிருஷ்ணனை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுதொடர்பான முன்பகையால், 2022ல் புள்ளியந்தோப்பில் ஆலி சுரேஷை தீர்த்து கட்டியுள்ளனர். அதன்பின் திட்டமிட்டு மாதவனையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

