/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை
/
சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை
ADDED : மே 30, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக் நகர் :கோடம்பாக்கம் மண்டலம், 135வது வார்டு அசோக் நகரில், ஆறாவது அவென்யூ சாலை உள்ளது.
இச்சாலையில், தனியார் பள்ளி அருகே உள்ள சாலையோர மரத்தின் கிளை, திடீரென முறிந்து விழுந்தது.
மரத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வர தாமதமானதால், வாகன ஓட்டிகள் அச்சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். காலை 8:00 மணிக்கு மேல் வந்த அதிகாரிகள், சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரக்கிளையை வெட்டி அகற்றினர்.

