/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீட்கப்பட்ட நுாத்தஞ்சேரி குளத்தில் பூங்கா, வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
மீட்கப்பட்ட நுாத்தஞ்சேரி குளத்தில் பூங்கா, வசதி ஏற்படுத்த கோரிக்கை
மீட்கப்பட்ட நுாத்தஞ்சேரி குளத்தில் பூங்கா, வசதி ஏற்படுத்த கோரிக்கை
மீட்கப்பட்ட நுாத்தஞ்சேரி குளத்தில் பூங்கா, வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 06, 2024 12:20 AM

மாடம்பாக்கம்,தாம்பரம் மாநகராட்சி, 70வது வார்டு மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரியில் பழமையான குளம் உள்ளது. 4 ஏக்கர் பரப்புடைய குளத்தில் 1 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நகரமைப்பு அதிகாரிகள், நில அளவையர் ஆகியோர் இணைந்து, குளத்தை முழுதுமாக அளவீடு செய்தனர். சில நாட்களுக்கு முன், ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மீட்டு, கல் பதித்துள்ளனர்.
இந்நிலையில், குளத்தை துார்வாரி, வசதிகள் ஏற்படுத்தினால், தாங்களே பராமரிப்பதாக, பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
மீட்கப்பட்ட குளத்தைச் சுற்றி, முழுதுமாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். குளத்தை துார்வாரி, ஆழப்படுத்தி மழைநீர் தேங்க வழிவகை செய்ய வேண்டும்.
நடைபாதை, பூங்கா, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இப்படி செய்தால், ஆக்கிரமிப்பை தடுக்கலாம். அதேநேரத்தில், நுாத்தஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பெரியவர்கள், சிறுவர்கள் பெரும் பயனடைவர்.
சுற்றுச்சுவர் கட்டி, பூங்கா அமைத்து கொடுத்தால், நாங்களே பராமரிக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.