/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டரில் சென்ற பெண் மினி லாரி மோதி பலி
/
ஸ்கூட்டரில் சென்ற பெண் மினி லாரி மோதி பலி
ADDED : ஜன 26, 2024 12:52 AM

புழல், சென்னை, புழல் அடுத்த சூரப்பட்டு சண்முகபுரம், பாரதிதாசன் நகர், எட்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த மதன்குமார், 34, என்பவரது மனைவி கவிதாஞ்சலி, 29.
இவர், புழல் காவாங்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.
நேற்று காலை 9:10 மணியளவில், 'டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப்' ஸ்கூட்டரில், செங்குன்றம் - -அம்பத்துார் சாலையில் பணிக்குச் சென்றார்.
சூரப்பட்டு, சென்னை குடிநீர் வாரிய அலுவலகம் அருகே, முன்னால் சென்ற மற்றொரு ஸ்கூட்டரை முந்திச் செல்ல முயன்ற மினி லாரி ஒன்று, கவிதாஞ்சலியின் ஸ்கூட்டர் மீது மோதியது.
நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது மினி லாரி ஏறி, நிற்காமல் சென்றது. இதில் உடல் நசுங்கி, கவிதாஞ்சலி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார், அவரது உடலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி மற்றும் அதன் டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

