/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நமது நாளிதழ் செய்திக்கு நடவடிக்கை கண்ணகி தெருவிற்கு மழைநீர் வடிகால்
/
நமது நாளிதழ் செய்திக்கு நடவடிக்கை கண்ணகி தெருவிற்கு மழைநீர் வடிகால்
நமது நாளிதழ் செய்திக்கு நடவடிக்கை கண்ணகி தெருவிற்கு மழைநீர் வடிகால்
நமது நாளிதழ் செய்திக்கு நடவடிக்கை கண்ணகி தெருவிற்கு மழைநீர் வடிகால்
ADDED : ஜன 17, 2024 12:32 AM

மடிப்பாக்கம், நமது நாளிதழ் செய்தியின் நடவடிக்கையாக பள்ளிகள் நிறைந்த கண்ணகி தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் கண்ணகி தெரு உள்ளது. அத்தெருவில் தனியார் சி.பி.எஸ்.சி., மெட்ரிக்குலேஷன், துவக்கப்பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளி ஆகியவை உள்ளன.
அதில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேலும், ஆதரவற்றோர் இல்லமும் அத்தெருவில் செயல்பட்டு வருகிறது.
இத்தெருவின் மேற்கு பகுதி மேடாகவும், கிழக்கு பகுதி பள்ளமாகவும் காட்சியளிக்கிறது. இச்சாலையில் முறையான மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. பழைய வடிகாலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு பருவமழை துவங்குவதற்கு முன் அக்., மாதம் அவ்வப்போது பெய்த கனமழை காரணமாக மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்றபட்டு சாலையில் மழைநீர் குளம்போல தேங்கியது.
மழைநீர் வடிய வழியில்லாததால் கழிவுநீர் கலந்த மழைநீரில் ஆயிரக்ணக்கான மாணவ, மாணவியர் கடந்து சென்று பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து இதுபோன்று கழிவுநீர் கலந்த மழைநீரில் மாணவர்கள் நடந்து சென்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நிரந்தர தீர்வு காண அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமது நாளிதழ் படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியிட்டது. அதன் நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
மேலும், மழைநீர் புழுதிவாக்கம் ஏரியில் சேரும் வகையில் பல தெருக்களில் இப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அடுத்த மழைக்கு இச்சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.***

