/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வாட்ஸாப்'பில் ப்ரீமியம் எல்.ஐ.சி., அறிமுகம்
/
'வாட்ஸாப்'பில் ப்ரீமியம் எல்.ஐ.சி., அறிமுகம்
ADDED : மே 14, 2025 12:31 AM
சென்னை, எல்.ஐ.சி., வாடிக்கையாளர் போர்டலில், 2.20 கோடிக்கும் மேற்பட்ட பாலிசிதாரர்கள் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு நாளும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், எல்.ஐ.சி., 'ஆன்லைன்' சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புது முயற்சியாக, 'வாட்ஸாப் பாட்' வாயிலாக, பாலிசிதாரர்கள் ப்ரீமியம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி., போர்டலில் பதிவு செய்த வாடிக்கையாளர்கள், 89768 62090 என்ற 'வாட்ஸாப்' எண்ணை பயன்படுத்தி, பிரீமியம் செலுத்த வேண்டிய பாலிசி விபரங்களை அறியலாம். ப்ரீமியம் தொகையை செலுத்தி ரசீதும் பெறலாம்.
இந்த வசதியை, எல்.ஐ.சி.,யின் தலைமை நிர்வாக அதிகாரி, மேலாண்மை இயக்குனர் சித்தார்த்த மொஹந்தி துவக்கி வைத்தார். எல்.ஐ.சி.,யின் நிர்வாக இயக்குனர்கள், எஸ்.எம்.ஜெகநாத், தப்ளேஷ் பாண்டே, சத் பால் பானு, ஆர்.துரைசாமி உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
இவ்வாறு, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

