ADDED : ஜன 27, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, தைப்பூசம் மற்றும் குடியரசு தினம் என, இரண்டு நாட்கள் 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் பல இடங்களில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தன.
கே.எம்.கார்டன் பகுதியில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதை அறிந்த புளியந்தோப்பு போலீசார், குறிப்பிட்ட இடத்தில் சோதனையிட்ட போது, 48 குவார்ட்டர் மதுபாட்டில்கள் சிக்கின.
இதுதொடர்பாக, புளியந்தோப்பைச் சேர்ந்த துர்கா, 52, மற்றும் ரோசி, 29, ஆகியோரை கைது செய்தனர்.

