/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் தண்டவாளம் அருகே மீட்கப்பட்டவர் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலம் வாலிபர் கைது
/
ரயில் தண்டவாளம் அருகே மீட்கப்பட்டவர் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலம் வாலிபர் கைது
ரயில் தண்டவாளம் அருகே மீட்கப்பட்டவர் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலம் வாலிபர் கைது
ரயில் தண்டவாளம் அருகே மீட்கப்பட்டவர் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலம் வாலிபர் கைது
ADDED : செப் 18, 2025 06:56 PM

சென்னைசைதாப்பேட்டை ரயில் நிலைய தண்டவாளம் அருகே மீட்கப்பட்ட நபர், போதை பொருளுக்காக அடித்து கொல்லப்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 14ம் தேதி இரவு 9:30 மணியளவில், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து, மாம்பலம் ரயில் போலீசாருக்கு தொடர்பு கொண்ட டாக்டர்கள், 'ரயிலில் அடிபட்டு ஒருவர் இங்கு அழைத்து வரப்பட்டார்.
'அவரை, மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்' எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமைனைக்கு சென்று, அந்த நபர் குறித்து விசாரித்தனர். அவர், தி.நகரைச் சேர்ந்த ரமேஷ், 50, என்பது தெரியவந்தது. மயக்கத்தில் இருந்ததால் அவரிடம் தொடர்ந்து விசாரிக்க முடியவில்லை.
இந்நிலையில், அவர் அடிபட்டதாக கூறப்படும், சைதாப்பேட்டை ரயில் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரமேஷை கீழே தள்ளி விட்டு, தலை, கழுத்து மற்றும் வயிற்றில் எட்டி உதைப்பது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார்.
கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், ரமேஷை தாக்கிய, கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரியாஷ், 25 என்பவரை கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
நான் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மது போதையில் சுற்றித்திரிந்தேன். எனக்கு 'கூல் லிப்' எனும் போதை பொருள் தேவைப்பட்டது.
இது தொடர்பாக, 50 வயது நபரிடம் கேட்டேன்; இல்லை என்றார். ஆனால், பாக்கெட்டில், கூல் லிப் வைத்திருந்தார். அதை எடுக்க முயன்றேன். அவர் என் கை விரலை கடித்துவிட்டார்.
இதனால், ஆத்திரத்தில் அவரை கைகளால் தாக்கினேன். கீழே விழுந்துவிட்டார். அப்படியும் ஆத்திரம் தீராமல் காலால் அவரை தலை, மார்பு, வயிற்றில் எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.