/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடி, துரைப்பாக்கத்தில் அடுக்குமாடி வளாகங்களை அமைக்கிறது 'அரிஹந்த்'

ADDED : ஜூன் 14, 2025 02:36 AM

சென்னை:'அரிஹந்த்' கட்டுமான நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்று அடுக்குமாடி அலுவலக வளாக திட்டங்களை, பல ஆண்டுகமாக செயல்படுத்தி வருகிறது.
இந்த வகையில், சென்னை பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில், புதிய அலுவலக வளாக திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி, துரைப்பாக்கம் பிரதான சாலையில், 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி அலுவலக வளாகம் கட்டப்பட உள்ளது. 'சப்லைம்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 3.10 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு அலுவலக இடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் கட்டுமான பணிகள், 2028 ல் முடிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதேபோல், பெருங்குடியில், 'வாயு' என்ற பெயரில், புதிய அடுக்குமாடி வளாகம் கட்டப்பட உள்ளது. ஆறு தளங்களுடன் அமையும் இந்த வளாகத்தில், 80,000 சதுர அடி அளவுக்கு அலுவலக இடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள் கூறுகையில், 'அரிஹந்த் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்கும் அடுக்கடி வளாகங்களை அமைப்பது, வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட் வளர்ச்சியில், சென்னைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்துள்ளது' என்றனர்.