/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்ஸ்ட்ராங்க் கொலை குற்றவாளியின் மகன் கைது
/
ஆம்ஸ்ட்ராங்க் கொலை குற்றவாளியின் மகன் கைது
ADDED : ஜூன் 26, 2025 12:14 AM
சென்னை, மறைந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவரின் மகன் கைது செய்யப்பட்டார்.
பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் புளியந்தோப்பு நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கங்கா கணேஷ், 19, மற்றும் தணிகைவேல், 42, என இருவரை, பேசின் பிரிட்ஜ் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில், கங்கா கணேஷ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள திருமலையின் மகன்.
கங்கா கணேஷ் மீது ஏழு குற்ற வழக்குகளும் தணிகைவேல் மீது 24 குற்ற வழக்குகளும் உள்ளன.
நேற்று இவர்களை போலீசார் கைது செய்யும்போது இரண்டு கிலோ குட்கா இருந்துள்ளது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.