/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய கைலாஷ் 'எல்' வடிவ மேம்பால பணி உறுதித்தன்மை குறித்து தணிக்கை குழு சோதனை

ADDED : மே 26, 2025 03:12 AM

சென்னை:அடையாறு, சர்தார் பட்டேல் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, நெடுஞ்சாலைத் துறை சார்பில், சார்தார் பட்டேல் சாலை - ஓ.எம்.ஆரை இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில், 85 கோடி ரூபாயில், 'எல்' வடிவ மேம்பாலம் கட்டும் பணி, 2023ல் துவங்கியது.
இதற்காக, 75 அடி அகல சாலை, 110 அடி அகலமாக மாற்றப்பட்டது. மேலும், சி.எல்.ஆர்.ஐ., வளாகத்தில் நின்ற, 225 மரங்கள் உரிய அனுமதியுடன் அகற்றப்பட்டன. மாற்றாக, 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேம்பாலத்தை ஜூலை மாதத்திற்குள் முடிக்கும் வகையில், பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேம்பாலம் கட்டுமான பணியின் தரம் குறித்து, சேலம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் தட்ஷிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.
இதில், 'ரிபஷண்ட் ஹேமர்' கருவி கொண்டு, கட்டி முடித்த மேம்பாலத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்தனர்.
மேலும், கான்கிரீட் கலவையின் தரத்தை நிர்ணயிக்க, 'க்யூப்' நுட்பத்தில், தண்ணீரில் 28 நாட்கள் ஊற வைத்த கான்கிரீட் துண்டுகளை சோதனை செய்தனர்.
மேலும், மதிப்பீடு தொகைக்கு ஏற்ப பணி முடிக்கப்பட்டுள்ளதா, நிர்ணயித்த கால அவகாசத்தில் பணி முடியுமா என, ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்தனர். பணியை விரைந்து முடிக்க, உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.