/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் ரூ. 522 கோடி திட்டங்கள் சாதனை மலரில் புள்ளி விவரம்
/
ஆவடியில் ரூ. 522 கோடி திட்டங்கள் சாதனை மலரில் புள்ளி விவரம்
ஆவடியில் ரூ. 522 கோடி திட்டங்கள் சாதனை மலரில் புள்ளி விவரம்
ஆவடியில் ரூ. 522 கோடி திட்டங்கள் சாதனை மலரில் புள்ளி விவரம்
ADDED : ஜூன் 11, 2025 12:53 AM
ஆவடி,ஆவடி மாநகராட்சியின் நான்கு ஆண்டு சாதனை மலரை, கலெக்டர் பிரதாப் தலைமையில் அமைச்சர் நாசர் வெளியிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில், 522. 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,095 பணிகள் செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஆவடி மாநகராட்சியில், 13,916 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு, 137.74 கி.மீ., நீளத்திற்கு பகிர்மான குழாய் பதிக்க 59.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 99.81 கி.மீ., துாரத்திற்கு 571 சாலை பணிகள் நடந்துள்ளன. 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டட பணிகள், 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 3.74 கோடி ரூபாயில் குடிநீர் பணிகளும், 3.30 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் 20 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய், 150 கோடி ரூபாயில் குடிநீர் திட்டங்கள், 150 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம், 4.40 கோடி ரூபாயில் குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் என, மொத்தம் 324.4 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.