/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்களை கவர்ந்த வாழை நார் புடவைகள்
/
பெண்களை கவர்ந்த வாழை நார் புடவைகள்
ADDED : ஜன 28, 2024 12:50 AM

ஆழ்வார்பேட்டை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலை, சங்கரா ஹாலில், 'கிராப்ட் கார்டன்' சார்பில் கைவினை மற்றும் கைத்தறி கண்காட்சி, கடந்த வாரம் துவங்கியது.
இங்கு, ஒடிசா புடவைகள், ம.பி.,யின் மகேஸ்வரி சில்க், பனாரஸ் சில்க் காட்டன் சேலைகள், 1,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
வாழை நாரில் நெய்யப்பட்ட புடவைகள், பெண்களை மிகவும் கவர்ந்துள்ளன.
ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் குயில்ட் போர்வைகள், விற்பனைக்கு வந்துள்ளன. இப்போர்வைகளை, இரு பக்கமும் பயன்படுத்தலாம்.
ராஜஸ்தான் நகைகள், நவரத்தின கற்கள், வண்ண வண்ண ஓவியங்கள், மரத்தில் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு சாமான்கள், பருத்தி ஆடைகள், குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கைவினை பொருட்களுக்கு 10 சதவீதம், கைத்தறி பொருட்களுக்கு விலையில் 20 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கின்றன. காலை 10:30 மணிக்கு துவங்கி இரவு 8:30 மணி வரை கண்காட்சி நடக்கிறது.