/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 28, 2025 03:59 AM
சென்னை:அன்னை வேளாங்கண்ணி பள்ளிக்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, கே.கே.நகர்., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அசோக்நகர், 16வது அவென்யூவில், அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி உள்ளது. நேற்று காலை பள்ளிக்கு வந்த இ - மெயிலில், 'பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இரவில் வெடிக்கும்' என, மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதை அறிந்த பள்ளி முதல்வர் பிரிசில்லா, கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் மகேஷ் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள் காலை 10:45 மணியளவில் சோதனையை துவங்கினர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட சோதனையில், வெடிப்பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.