/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி மீது மோதிய பஸ் ஓட்டுநர் காயம்
/
லாரி மீது மோதிய பஸ் ஓட்டுநர் காயம்
ADDED : ஜூன் 13, 2025 02:23 AM

சென்னை:மாதவரம் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் இருந்து, திருப்பதி செல்லக்கூடிய ஆந்திரா மாநில அரசு பேருந்து, நேற்று முற்பகல் 11:00 மணியளவில் புறப்பட்டது.
பேருந்தை ஓட்டுநர் மதுசூதனராவ் ஓட்டிச் சென்றார்; 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.
மாதவரத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் கொல்கட்டா நெடுஞ்சாலையில், புழல் சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, சாலை ஓரமாக குவிந்துள்ள மணல், குப்பை அகற்றும் சென்னை மாநகராட்சி லாரி ஒன்று, துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தது.
அதே நேரம், அந்த வழியே வந்த திருப்பதி பேருந்து, எதிர்பாராவிதமாக லாரியில் மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். பயணியர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மாதவரம் போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.