/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாய்லாந்தில் இருந்து கடத்தல் ரூ.2.8 கோடி கஞ்சா பறிமுதல்
/
தாய்லாந்தில் இருந்து கடத்தல் ரூ.2.8 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து கடத்தல் ரூ.2.8 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து கடத்தல் ரூ.2.8 கோடி கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூன் 13, 2025 09:13 PM
சென்னை:இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், 10ம் தேதி சென்னை வந்தது. அதில் வந்திருறங்கிய ஆண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவர் சென்னை வந்து விட்டு, பெங்களூரு செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
'லக்கேஜில் குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட் உள்ளது' என, அவர் கூறியுள்ளார். சந்தேகத்தில் பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது, உணவுப் பொருட்கள் பாக்கெட்களுக்குள், பதப்படுத்தப்பட்ட 2.8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் சர்வதேச மதிப்பு 2.8 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தி வந்தவரை கைது செய்தனர். இவர் ஏற்கனவேன கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவரா என்ற கோணத்தில், சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.