/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டோன்மென்ட் கிரிக்கெட் பரங்கிமலை அணி தேர்வு
/
கன்டோன்மென்ட் கிரிக்கெட் பரங்கிமலை அணி தேர்வு
ADDED : ஜன 10, 2024 12:27 AM

சென்னை, இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ், தென் மண்டலத்தில், 19 கன்டோன்மென்ட் அலுவலகங்கள் மற்றும் ஏழு எஸ்டேட் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் இடையே, கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
முதற்கட்ட போட்டி, சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடந்தன. சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில், 6, 7ம் தேதிகளில் நடந்த போட்டியில், சென்னை பரங்கிமலை, கண்ணுார், செகந்திராபாத், ஊட்டி ஆகிய கன்டோன்மென்ட் ஊழியர்கள் மற்றும் சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் ராணுவ எஸ்டேட் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில், பரங்கிமலை கன்டோன்மென்ட் முதலிடத்தை பிடித்தது. இந்த குழுவுக்கு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன. பிப்., 10, 11ம் தேதிகளில், பூனேயில் நடக்கும் இறுதி போட்டியிலும், இக்குழு பங்கேற்க உள்ளது.

