/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் அதிவேகமாக கார் ஓட்டி ரகளை செய்த ஐ.டி., ஊழியர் மீது வழக்கு
/
மெரினாவில் அதிவேகமாக கார் ஓட்டி ரகளை செய்த ஐ.டி., ஊழியர் மீது வழக்கு
மெரினாவில் அதிவேகமாக கார் ஓட்டி ரகளை செய்த ஐ.டி., ஊழியர் மீது வழக்கு
மெரினாவில் அதிவேகமாக கார் ஓட்டி ரகளை செய்த ஐ.டி., ஊழியர் மீது வழக்கு
ADDED : ஜூன் 21, 2025 11:52 PM
சென்னை, சென்னை மெரினா கடற்கரை உட்புற சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், நேற்று முன்தினம் காலை, ஹூண்டாய் கார் ஒன்று அதிவேகமாக சென்றது.
இதை பார்த்த மெரினா காவல் நிலைய போலீஸ்காரர் செல்வம், காரை தடுத்து நிறுத்தினார். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல், பின்நோக்கி இயக்கி மோதுவது போல பயம் காட்டி, அவ்வையார் சிலை அருகே உள்ள வழியாக வெளியே சென்றுவிட்டார்.
கார் எண்ணை வைத்து விசாரித்ததில், மயிலாப்பூர், சிதம்பரசாமி கோவில், 3வது தெருவைச் சேர்ந்த அபிஷேக், 25, என்பவரது கார் என கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரது வீட்டிற்கு மெரினா போலீசார் சென்றனர். அவர் வீட்டில் இல்லாததால், விசாரணைக்கு ஆஜராகும்படி, குடும்பத்தினரிடம் கூறிவிட்டு திரும்பினர்.
பின் இரவு 8:00 மணிக்கு, அபிஷேக், தன் வழக்கறிஞருடன் ஆஜரானார். 'இனிமேல் இதுபோன்று காரை ஓட்ட மாட்டேன்' என, மன்னிப்பு கோரினார்.
அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் அபிஷேக், மனைவி, நண்பருடன் மெரினாவிற்கு வந்தபோது, 'காரை நன்றாக ஓட்டுகிறீர்கள்' என அவர்கள் உற்சாகப்படுத்தி உள்ளனர். இதனால், அதிவேகமாக காரை இயக்கியுள்ளார்.
மேலும் 'போலீசாரிடம் சிக்கி கொள்ளக் கூடாது' என்பதற்காக, தொடர்ந்து வேகமாக ஓட்டியதாக கூறியுள்ளார்.
காரை அஜாக்கிரதையாக ஓட்டியது உட்பட, மூன்று பிரிவுகளின் கீழ் அபிஷேக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 'மீண்டும் இதுபோன்று காரை இயக்ககூடாது' என எச்சரித்து, அனுப்பி வைத்தனர்.

