/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பல்கலை ஹாக்கி 'ஏ' மண்டல அணி முதலிடம்
/
சென்னை பல்கலை ஹாக்கி 'ஏ' மண்டல அணி முதலிடம்
ADDED : ஜன 27, 2024 12:46 AM

சென்னை,சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில், 'ஏ' மண்டல இணைப்பு அணி வெற்றி பெற்றது.
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகள் நடக்கின்றன.
அந்த வகையில், மண்டலங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி, போரூர் ராமச்சந்திரா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இதில், எம்.ஓ.பி., - எத்திராஜ், டபிள்யூ.சி.சி., - ஏ மண்டல இணைப்பு அணி உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் 'ஏ' மண்டல இணைப்பு அணி, 2 - 1 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணியை தோற்கடித்தது.
மூன்றாம் இடத்தை,'பி' மண்டல இணைப்பு அணியும், நான்காம் இடத்தை எத்திராஜ் கல்லுாரி அணியும் கைப்பற்றின.

