/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10ம் வகுப்பு மாணவி துாக்கிட்டு தற்கொலை
/
10ம் வகுப்பு மாணவி துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 12, 2024 01:50 AM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கே.எம்., கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 48; பெயின்டர். குடும்ப பிரச்னையால் இவரது மனைவி சுகன்யா, 10 ஆண்டுகளாக இவரை பிரிந்து, மகனுடன் அவரது தாய் வீட்டில் வசிக்கிறார். சதீஷுடன் தாய் மற்றும் 15 வயது மகள் தங்கியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது மகள் பள்ளி முடிந்து தோழியருடன் விளையாடி முடித்து, தினமும் இரவு 8:00 மணிக்கு தான் வீட்டுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல், 9ம் தேதி இரவு 9:00 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதை சதீஷ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி, நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலை 4:30 மணிக்கு வீட்டிற்கு வந்து, மாடியில் உள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

