/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 ஆண்டு பணிபுரிந்த 25 பேருக்கு சொகுசு கார் பரிசளித்த நிறுவனம்
/
10 ஆண்டு பணிபுரிந்த 25 பேருக்கு சொகுசு கார் பரிசளித்த நிறுவனம்
10 ஆண்டு பணிபுரிந்த 25 பேருக்கு சொகுசு கார் பரிசளித்த நிறுவனம்
10 ஆண்டு பணிபுரிந்த 25 பேருக்கு சொகுசு கார் பரிசளித்த நிறுவனம்
ADDED : ஜூன் 13, 2025 12:34 AM
சென்னை, உயிரி அறிவியல் நிறுவனங்களுக்கு, ஏ.ஐ., தீர்வுகளை வழங்கி வரும், 'அஜிலிசியம்' நிறுவனத்துக்கு, சென்னை பெருங்குடி உலக வர்த்தக மைய கட்டடத்தில் அலுவலகம் உள்ளது.
இதில், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் துவக்கப்பட்டு, தற்போது, 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்கான விழா, பெருங்குடியில் நேற்று நடந்தது.
அதில், அஜிலிசியம் நிறுவனம் துவக்கப்பட்டதில் இருந்து இதுவரை, அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வரும், 25 பணியாளர்களுக்கு, ஹூண்டாய் நிறுவனத்தின் தலா, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. கார் சாவியை, 'அஜிலிசியம்' நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜ் பாபு, பணியாளர்களிடம் வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து, ராஜ் பாபு கூறியதாவது:
தொழில் துறை முழுதும் எச்சரிக்கையுடன் நகரும் இந்தாண்டிலும், நாங்கள் பணியாளர்களின் உழைப்பையும், நிலைத்த நம்பிக்கையையும் மதித்து, உரிய ஊதிய உயர்வும், அங்கீகாரமும் வழங்க முடிவு செய்தோம்.
இந்த கார்கள் வெறும் பரிசு அல்ல. நீண்ட காலமாக நிறுவனத்துடன் பயணித்து, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பணியாளர்களின் விசுவாசத்தையும், ஒற்றுமையையும் கொண்டாடும் நன்றியின் வெளிப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.