/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டிஸ்மிஸ்' நபருக்கு முக்கியத்துவம் மேயர் மீது கவுன்சிலர்கள் கொதிப்பு

ADDED : ஜூன் 21, 2025 11:48 PM

பெருங்குடி, சென்னை மாநகராட்சி சார்பில், பெருங்குடி குப்பை கிடங்கில், கந்தல் சேகரிப்பாளர் புதுவாழ்வு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், கந்தல் என்ற குப்பை சேகரிப்பாளர்கள் 250 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உடல் நல பரிசோதனையும் நடந்தது.
நிகழ்ச்சயில், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆனால், பெருங்குடி மண்டல வார்டு கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து, கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:
எங்கள் மண்டலத்தில், மேயர், துணை மேயர் பங்கேற்ற நிகழ்வில், கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
அதே நேரம், பல்வேறு புகார்களால், கவுன்சிலர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட, பாபுவுக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அவர், மேயருக்கு பின் இருக்கையில், மேடையில் அமர்ந்திருந்தார்.
அரசு சார்ந்த நிகழ்வில், பார்வையாளராக பங்கேற்பதில் தவறில்லை; மேடையில், மேயரின் பின் இருக்கையில் அவர் அமர்ந்தது எந்த விதத்தில் சரியாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.