/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நலச்சங்கத்தினர் கேள்விக்கு விழிபிதுங்கிய கவுன்சிலர்கள்
/
நலச்சங்கத்தினர் கேள்விக்கு விழிபிதுங்கிய கவுன்சிலர்கள்
நலச்சங்கத்தினர் கேள்விக்கு விழிபிதுங்கிய கவுன்சிலர்கள்
நலச்சங்கத்தினர் கேள்விக்கு விழிபிதுங்கிய கவுன்சிலர்கள்
ADDED : ஜன 26, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, வேளச்சேரி பகுதிக்கு உட்பட்ட 176, 177வது வார்டில், ஏரியா சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வேளச்சேரி பகுதி ஒவ்வொரு மழைக்கும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. தரமணி சாலையில் உள்ள மூடுகால்வாயால் எந்த பயனும் இல்லை.
மேலும், வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு என 15 ஆண்டுகளில், 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து வடிகால், கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை என, நலச்சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, பதில் கூற முடியாமல் கவுன்சிலர்கள் திணறினர்.