/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.ஆர்.பி.எப்., வீரர் மாரடைப்பால் இறப்பு
/
சி.ஆர்.பி.எப்., வீரர் மாரடைப்பால் இறப்பு
ADDED : ஜன 27, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜட் கட்டோச், 29, என்பவர், போலீசாக பணியாற்றி வந்தார்.
அவருக்கும், சீமாதேவி என்ற பெண்ணுக்கும், ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணமானது. அவர்கள், மத்திய பாதுகாப்பு படை காவலர் குடியிருப்பில் வசித்தனர்.
நேற்று முன்தினம் இரவு பணியின்போது, திடீரென மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைனயில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜட் கட்டோச் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.

