/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கால்பந்து லீக் உதயநிதி அணி வெற்றி
/
டிவிஷன் கால்பந்து லீக் உதயநிதி அணி வெற்றி
ADDED : ஜூன் 11, 2025 12:52 AM
சென்னை, ஆடவருக்கான நான்காம் டிவிஷன் கால்பந்து போட்டியில், உதயநிதி அணி 2--0 என்ற கோல் கணக்கில், புழல் எப்.சி., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கால்பந்து போட்டி சென்னை, பேசின் பிரிட்ஜ், டான் பாஸ்கோ மைதானத்தில் நடக்கிறது.
நேற்றுமுன்தினம் நடந்த முதல் போட்டியில், உதயநிதி எப்.சி., மற்றும் புழல் எப்.சி., அணிகள் மோதின. இதில் உதயநிதி அணி 2--0 என்ற கோல் கணக்கில், புழல் எப்.சி., அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.
உதயநிதி அணி சார்பில், விஷ்வா 9வது நிமிடம், ராகுல் 49 வது நிமிடத்தில், தலா ஒரு கோல் அடித்து, அணிக்கு ஆறுதல் அளித்தனர்.
தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில், எஸ்.எம்.கிளப் அணி, சென்னை டைட்டன் அணியை எதிர்த்து களமிறங்கியது. இதில், சென்னை டைட்டன் அணி 4--0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.
சென்னை டைட்டன் அணி சார்பில், ரவி தெஜா 3, 6வது நிமிடங்களில், இரண்டு கோல் அடித்து அசத்தினார். லால் 22வது நிமிடம், நரேன் 40வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.