/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் சில்மிஷம் ஓட்டுனர் கைது
/
பெண்ணிடம் சில்மிஷம் ஓட்டுனர் கைது
ADDED : ஜன 26, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, சூளை, தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த, 20 வயது பெண்ணுக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இவர், தன் வீட்டு வாசலை சுத்தம் செய்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான சந்துரு, 35, என்பவர், மதுபோதையில் கைதட்டி அழைத்துள்ளார். பின், மொபைல்போனில் ஆபாச படம் காட்டி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண், இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், சந்துரு மதுபோதையில், தான் வசிக்கும் தெருவிலுள்ள பல பெண்களிடம், ஆபாச செய்கை காட்டி வந்தது தெரிந்தது. இதையடுத்து, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ், சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

