/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர வியாபாரிகளுக்கு இன்று தேர்தல்
/
சாலையோர வியாபாரிகளுக்கு இன்று தேர்தல்
ADDED : ஜூன் 26, 2025 12:19 AM
சென்னை,
மண்டல நகர விற்பனை குழுவிற்கான தேர்தல், 12 இடங்களில் இன்று நடைபெற உள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும், அந்தந்த வட்டார துணை கமிஷனரை தலைவராக கொண்ட நகர விற்பனை குழு அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு குழுவிற்கு ஆறு சாலையோர வியாபாரிகள் என, 90 உறுப்பினர்கள் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில், மாதவரம், ஆலந்துார், பெருங்குடி ஆகிய மண்டலங்களில், 42 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள மண்டலங்களில், 48 உறுப்பினர்களை தேர்வு செய்ய, பள்ளி, அலுவலகம் என, 12 இடங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
பதிவு செய்த வாக்காளர்கள், அரசின் அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்கலாம். முடிவுகள் நாளை வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.