/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பால்பேட்மின்டன் போட்டி எத்திராஜ் அணி முதலிடம்
/
பால்பேட்மின்டன் போட்டி எத்திராஜ் அணி முதலிடம்
ADDED : ஜன 26, 2024 12:47 AM

சென்னை, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 'பி' மண்டல பெண்களுக்கான பால் பேட்மின்டன் போட்டி, சென்னை, கொடுங்கையூர் அடுத்த சேலவாயல் திருத்தங்கல் நாடார் கல்லுாரியில் நடந்தது.
முதல் நாள் போட்டியை, கல்லுாரி முதல்வர் தேவி, எத்திராஜ் கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் உமாதேவி உள்ளிட்டோர் துவக்கினர்.
இந்த போட்டியில், 'பி' மண்டலத்திற்கு உட்பட்ட எத்திராஜ், டபிள்யூ.சி.சி., - திருத்தங்கல் நாடார், நாசரத், எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் உள்ளிட்ட 17 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'நாக் - அவுட்' முறையில் நடந்தன.
அனைத்து போட்டிகளின் முடிவில், எத்திராஜ் மற்றும் டபிள்யூ.சி.சி., அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான இப்போட்டியில், 35 - 27, 35 - 28 என்ற செட் கணக்கில் எத்திராஜ் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.

