/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 லட்சம் ' கேஷ் ' இருந்தும் சரக்கு மட்டும் திருடி சிக்கினார்
/
5 லட்சம் ' கேஷ் ' இருந்தும் சரக்கு மட்டும் திருடி சிக்கினார்
5 லட்சம் ' கேஷ் ' இருந்தும் சரக்கு மட்டும் திருடி சிக்கினார்
5 லட்சம் ' கேஷ் ' இருந்தும் சரக்கு மட்டும் திருடி சிக்கினார்
ADDED : ஜன 26, 2024 01:12 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே, ஆலம்பாடி மேட்டூர் கிராமத்தில், அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. 22ம் தேதி இரவு, மேற்பார்வையாளர் செல்வகுமார் மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிச் சென்றனர். காவலாளி வின்சென்ட், 70, பணியில் இருந்தார்.
அதிகாலை, 1:00 மணிக்கு மேல், டாஸ்மாக் கடைக்கு வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர், கட்டிலில் படுத்திருந்த வின்சென்டை கட்டிப் போட்டு, கடையின் ஷட்டரை உடைத்து, 1.56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 25 பெட்டி மது பாட்டில்களை அள்ளி சென்றனர்.
எனினும், மது பாட்டில்கள் விற்ற 4.81 லட்சம் ரூபாய் அவர்கள் கண்ணில் படாததால், அதை எடுக்காமல் சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, கள்ளக்குடி தனிப்படை போலீசார் விசாரணையில், ஆலம்பாடியில் பதுங்கி இருந்த தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு எபினேசர், 30, என்பவர் சிக்கினார்.
நண்பர்களுடன் சேர்ந்து, திருச்சியில் மட்டுமின்றி, அரியலுார் மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் திருடி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததை, அவர் ஒப்புக் கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு, அவரை கைது செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த 220 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கூட்டாளிகள் நான்கு பேரை தேடி வருகின்றனர்.

