/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு 10 மின்சார ரயில்கள் நீட்டிப்பு
/
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு 10 மின்சார ரயில்கள் நீட்டிப்பு
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு 10 மின்சார ரயில்கள் நீட்டிப்பு
தாம்பரம் - கூடுவாஞ்சேரிக்கு 10 மின்சார ரயில்கள் நீட்டிப்பு
ADDED : பிப் 25, 2024 12:16 AM

சென்னை, பயணியரின் நெரிசலை கருத்தில் வைத்து, சென்னை கடற்கரை - தாம்பரம் 10 மின்சார ரயில்கள், நாளை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின், வண்டலுார் - ஊரப்பாக்கம் இடையே பயணியரின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால், மின்சார ரயில்களின் சேவை, நாளை முதல் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
வார நாட்களில் நீட்டிப்பு:
சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு 7:19, 8:15, 8:45, 8:55, 9:40 மணி மின்சார ரயில்கள், நாளை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன
கூடுவாஞ்சேரி - தாம்பரத்துக்கு இரவு 8:55, 9:45, 10:10, 10:25, 11:20 மணிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும்
ஞாயிறுகளில் நீட்டிப்பு
சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு 7:20, 8:20, 8:40, 9:00, 9:50 மணி ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்படும்
கூடுவாஞ்சேரி - தாம்பரம் இரவு 8:55, 9:50, 10:10, 10:35, 11:20 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

