/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளாட்பார கடைக்காரரை மிரட்டி பணம் பறிப்பு: இருவர் கைது
/
பிளாட்பார கடைக்காரரை மிரட்டி பணம் பறிப்பு: இருவர் கைது
பிளாட்பார கடைக்காரரை மிரட்டி பணம் பறிப்பு: இருவர் கைது
பிளாட்பார கடைக்காரரை மிரட்டி பணம் பறிப்பு: இருவர் கைது
ADDED : ஜன 17, 2024 12:30 AM
வியாசர்பாடி, சென்னை, பெரம்பூர், குமாரசாமி தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர், 34.
இவர் வியாசர்பாடி ரயில்வே நிலைய நடைபாதையில் பொம்மை கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று நடைபாதையில் அப்துல்காதர் வியாபாரம் செய்த போது அவ்வழியாக வந்த நால்வர் கும்பல் அப்துல் காதரிடம் ஏன் நடைபாதையில் கடை வைத்துள்ளாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டு பணம் கேட்டுள்ளனர்.அவர் தர மறுக்கவே அடித்து அவரிடமிருந்த 2500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக், 25; நந்தகுமார், 19 ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.