/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல் டிவிஷன் கால்பந்து வருமான வரி அணி வெற்றி
/
முதல் டிவிஷன் கால்பந்து வருமான வரி அணி வெற்றி
ADDED : மே 29, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :சென்னை கால்பந்து அமைப்பின் சார்பில், ஆண்களுக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, பேசின்பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கிறது.
நேற்று நடந்த போட்டியில், வருமான வரித்துறை அணி, சாய் அணியை எதிர்கொண்டது. இதில், வருமான வரித்துறை அணி, 7 - 0 என்ற கோல் கணக்கில், சாய் அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது.
வருமான வரித்துறை அணி சார்பில், அமீர், சுபம் ஆகியோர் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினர். மேலும், எட்வின், தீபக், விக்னேஷ்வரன் ஆகியோர், தலா ஒரு கோல் அடித்தனர்.
சாய் அணி, போட்டியின் கடைசி நிமிடம் வரை, பந்தை கடத்தியவாறே போட்டியை முடித்துக்கொண்டது.

