ADDED : செப் 13, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை:சென்னை மேடவாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 24; உணவு டெலிவரி ஊழியர். தன் 'டியோ' ஸ்கூட்டரில் சோழிங்கநல்லுாரில் உணவு டெலிவரி செய்து, செம்மொழி சாலை வழியாக, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பெரும்பாக்கம் அருகே, சேதமடைந்த சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லிக்கற்களால் சறுக்கி விழுந்தார். விழுந்த வேகத்தில் 50 மீட்டருக்கு சறுக்கியவாறு சென்று அங்கிருந்த இரும்பு டேங்கில் மோதி, தலையில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன், சம்பவ இடத்திலேயே பலியானார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், கார்த்திகேயன் உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.