/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 'மாஜி' எஸ்.ஐ., சிறையில் மரணம்
/
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 'மாஜி' எஸ்.ஐ., சிறையில் மரணம்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 'மாஜி' எஸ்.ஐ., சிறையில் மரணம்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 'மாஜி' எஸ்.ஐ., சிறையில் மரணம்
ADDED : செப் 29, 2025 02:29 AM
புழல்: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்.ஐ., புழல் சிறையில் திடீரென உயிரிழந்தார்.
வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 76. காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோட்டூர்புரம் பகுதியில், கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமினில் வெளிவந்த இவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகி வந்தார். இந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 23ம் தேதி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறை மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக மூலம் அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.