/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கனரக வாகனங்களை அடித்து நொறுக்கிய நான்கு பேர் கைது
/
கனரக வாகனங்களை அடித்து நொறுக்கிய நான்கு பேர் கைது
ADDED : மார் 21, 2025 12:08 AM

எண்ணுார், திருவொற்றியூர், கே.வி.கே. குப்பம் - எண்ணுார் விரைவு சாலையின் அணுகு சாலையில், நேற்று முன்தினம் இரவு, கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதிகாலையில் அவ்வழியே சென்ற, மதுபோதை ஆசாமிகள், ஆறு கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பினர்.
புகாரையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, எண்ணுார் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர்.
அதன்படி, கனரக வாகனங்களின் கண்ணாடியை உடைத்த, தண்டையார்பேட்டையை சேர்ந்த ராமசந்திரன், 42, தேவராஜன், 36, அர்ஜுனன், 41, ராஜசேகர், 45, ஆகிய நான்கு பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம், தொடர் விசாரணை நடக்கிறது.