ADDED : ஜன 27, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக வந்த கிடைத்த தகவலின்படி மாதவரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில், பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இருவரை பிடித்து, பைகளை சோதனையிட்டனர். அதில், 12 பார்சல்களில், 26 கிலோ முதல் தர கஞ்சா சிக்கியது.
விசாரணையில், ஆந்திர மாநிலம், நெல்லுார், கமல்லாபாளையத்தைச் சேர்ந்த நசீனாபாய், 26, சித்திர ரெட்டி பாளையத்தைச் சேர்ந்த பரிக்கிசாய், 25, என்பது தெரிந்தது.
அவர்கள், சென்னையில் உள்ள வியாபாரிகளுக்காக, ஆந்திர மாநில பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவற்றின் சந்தை மதிப்பு, 7 லட்சம் ரூபாய். இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

