/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணி துவக்கம்
/
அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணி துவக்கம்
ADDED : செப் 29, 2025 02:33 AM

வில்லிவாக்கம்,: நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, வில்லிவாக்கம், திருமங்கலம் சாலை ஓட்டேரி கூவம் ஆற்றில் இணைக்காமல், நிலுவையில் விடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணி மீண்டும் துவங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகளால், சென்னையில் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னையில் சில இடங்களை குறிப்பிட்டு, இரு நாட்களுக்கு முன், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதில், அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம், திருமங்கலம் சாலையில் வடிகால்வாய் பணிகள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. ஒரே இடத்தில் பல காரணங்களால் மூன்று ஒப்பந்ததாரர்கள் மாறியும் பணிகள் நிலுவையில் கிடப்பதாக குறிப்பிட்டிருந்தது.
குறிப்பாக, இப்பகுதியில் செல்லும் வடிகால்வாயை, ஓட்டேரி கால்வாயில் இணைப்பதற்கு, ரயில்வே இடம் தடையாக இருந்தது.
நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, ரயில்வேயிடம் அனுமதி பெற்று, நிலுவையில் இருந்த பணியை மீண்டும் மாநகராட்சி துவங்கியுள்ளது. பருவமழைக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

