/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சன்னிதி தெருவை முடக்கும் வாகனங்களால் கடும் நெரிசல்
/
சன்னிதி தெருவை முடக்கும் வாகனங்களால் கடும் நெரிசல்
சன்னிதி தெருவை முடக்கும் வாகனங்களால் கடும் நெரிசல்
சன்னிதி தெருவை முடக்கும் வாகனங்களால் கடும் நெரிசல்
ADDED : ஜன 26, 2024 12:42 AM
திருவொற்றியூர், தேரடி, சன்னிதி தெருவை முடக்கும் வகையில், வாகனங்களை,'பார்க்கிங்' செய்வதால், பக்தர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது.
இக்கோவிலுக்கு, தினசரி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர். விழா காலங்களில், கூட்டம் கட்டுக்கடுங்காது.
இந்நிலையில், கோவிலுக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து ராஜகோபுரம் வரை செல்லும் சன்னிதி தெருவில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதில், சில கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை சன்னிதி தெருவில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக நிறுத்துவதால், சன்னிதி தெரு முழுதும் முடங்கி விடுகிறது.
இதனால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து ராஜகோபுரம் வரையிலான 500 மீட்டர் துாரத்தைக் கடக்க, அரை மணி நேரமாகிறது என, பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அதிக அளவில், 'பார்க்கிங்'கை அனுமதிக்கும் கடைகளைப் பூட்டி 'சீல்' வைக்க வேண்டும் என, பக்தர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

