/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுரங்கப்பாதையில் குப்பை போக்குவரத்து பாதிப்பு
/
சுரங்கப்பாதையில் குப்பை போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 02, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்கிண்டி, கத்திப்பாரா சதுக்க சுரங்கப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி குப்பை அகற்றும் தனியார் நிறுவன லாரி ஒன்று, அதிகமான குப்பை கழிவுகளுடன், அந்த சுரங்கப்பாதையை நேற்று கடந்தது.
அப்போது, லாரியில் இருந்த குப்பை, பெருமளவு சாலையில் கொட்டியது. இதை கவனிக்காமல் ஓட்டுனர் சென்றுவிட்டார். பாதை முழுதும் குப்பை குவிந்து கிடந்ததால், வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் வந்து, குப்பையை அகற்றி சுத்தம் செய்தபின், போக்குவரத்து சீரானது.

