/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஓ.சி., டேங்க் விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் பலி
/
ஐ.ஓ.சி., டேங்க் விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் பலி
ஐ.ஓ.சி., டேங்க் விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் பலி
ஐ.ஓ.சி., டேங்க் விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் பலி
ADDED : ஜன 27, 2024 12:32 AM

தண்டையார்பேட்டை,தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது. இங்கிருந்து லாரிகள் மற்றும் ரயில் மூலம் பெட்ரோல், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இங்கு ஒப்பந்தம் மற்றும் நிரந்தர பணியாளர்களாக 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், கடந்த டிச., 27ம் தேதி காலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எத்தனால் சேமிப்பு டேங்க் செல்லும் லுாப் குழாயில் பழுது காரணமாக, 'வெல்டிங்' பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது அதிகப்படியான சூடால் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.தீ கொழுந்து விட்டெரிந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.இந்த விபத்தின்போது, வெல்டிங் பணியில் இருந்த பெருமாள், 50, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அருகில் பணியில் இருந்த சரவணன், பன்னீர் ஆகியோர் படுகாயங்களுடன், கடந்த ஒரு மாதமாக, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சரவணன், 43, நேற்று உயிரிழந்தார்.

