/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் அத்துமீறல் ஐ.டி., ஊழியரிடம் விசாரணை
/
பெண்ணிடம் அத்துமீறல் ஐ.டி., ஊழியரிடம் விசாரணை
ADDED : ஜூன் 26, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொளம்பூர்,திருமங்கலம் காவல் சரகத்தைச் சேர்ந்த 35 வயது பெண், திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, கடந்த 15ம் தேதி நள்ளிரவு, நொளம்பூர் ஏரி திட்டம் பகுதி வழியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அவ்வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர், அப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். பின், அங்கிருந்து தப்பி ஓடினார். அதிர்ச்சி அடைந்த பெண், நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில், போரூரைச் சேர்ந்த 29 வயது ஐ.டி., நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியரிடம் விசாரிக்கின்றனர்.