/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி வெட்டி கொலை காசிமேடு வாலிபர் கைது
/
ரவுடி வெட்டி கொலை காசிமேடு வாலிபர் கைது
ADDED : பிப் 06, 2024 12:23 AM
காசிமேடு, காசிமேடு, பவர் குப்பத்தைச் சேர்ந்த ரவுடி வெங்கட்ராமன், 28 என்பவர், நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் புதுமனை குப்பம் பகுதியில் ரகளையில் ஈடுபடட்டார்.
அங்கிருந்த, காசிமேடு இந்திராநகர் பகுதியை சேர்ந்த ரவுடிகள் விமல்குமார், 23, பூபாலன், 21 உள்ளிட்ட ஐந்து பேருடன் வெங்கட்ராமன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி, வெங்கட்ராமனை மற்ற ரவுடிகள் வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அக்கம் பக்கத்தினர் காசிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து, வெங்கட்ராமனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ரவுடி கும்பலை தேடி வந்தனர். நேற்று மாலை முகேஷ், 19 என்பவரை, காசிமேடு பகுதியில் செய்தனர். அவரிடம் விசாரித்ததில், விமல்குமார் - வெங்கட்ராமன் இடையே, யார் பெரிய ரவுடி என்ற மோதலில், கொலை நிகழ்ந்ததாக கூறினார். தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.