/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வக்கீல்கள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு
/
வக்கீல்கள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு
ADDED : ஜூன் 19, 2025 12:14 AM

ஆலந்துார், ஆலந்துார் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், சோழிங்கநல்லுார் நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலந்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நேற்று காலை 10:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், ஜி.எஸ்.டி., சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆலந்துார் நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்த அறிவுறுத்தினர். அதை வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால், அவர்களை கைது செய்யும் வகையில், மாநகர பேருந்து வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால், காலை 11:10 மணிக்கு, வழக்கறிஞர்கள் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.