/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டில் தீ பிடித்து லோடுமேன் பலி
/
வீட்டில் தீ பிடித்து லோடுமேன் பலி
ADDED : ஜன 17, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, விழுப்புரம் மாவட்டம், ஆதனுாரைச் சேர்ந்தவர் கோவிந்தன், 55; லோடுமேன். வேளச்சேரி, ராஜலட்சுமி நகரில் உள்ள ஏழுமலைவாசன் வீட்டின் மாடியில் தங்கி பணி புரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கோவிந்தன் வீட்டில் தீ பிடித்து புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, உள்ளே கோவிந்தன் இறந்து கிடந்தார்.
வேளச்சேரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், சிகரெட் துண்டில் இருந்த தீக்கனல், கட்டில் மெத்தை, தலையணையில் உரசி தீ பிடித்தது தெரிய வந்துள்ளது.
வேறு எதாவது காரணமாக இருக்குமோ என, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

