/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் கழிப்பறை பராமரிப்பு பணி
/
கிடப்பில் கழிப்பறை பராமரிப்பு பணி
ADDED : ஜன 27, 2024 12:31 AM

பெரம்பூர் திரு.வி.க.நகர் மண்டலம், 71வது வார்டுக்குட்பட்ட சின்னையா லைனில் மாநகராட்சி பொதுக்கழிப்பறை உள்ளது. பராமரிப்பு பணிக்காக, பல மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. தற்போது, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கதவுகள் மட்டுமே பொருத்த வேண்டும். கதவுகளும் வளாகத்திற்குள்ளேயே உள்ளன.
ஆனால் கடந்த சில மாதங்களாக, பணிகள் மேற்கொள்ளப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், சின்னையா லைனை சுற்றியுள்ள ஆறு தெருப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து பகுதிமக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வோர் அதிகம். பெண்களும், வீட்டு வேலைகளுக்கு செல்கின்றனர். காலை கடன்களை அதிகாலையிலேயே முடித்து செல்பவர்கள் அதிகம்.
தற்போது பரமாரிப்பிற்காக பூட்டி வைத்துள்ளனர். பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

