ஹரிதிரு மருமகனே, விக்னங்களை போக்குபவனே, தேவர்கள் கணபதியே, கற்றவருக்கு துணை புரிவாயே என விநாயகனை துதிக்கும் விநாயகர் கெளத்துவத்தோடு அனிதா குஹா குழுவினர் ஜெகதாலயா மார்கழி நிருத்யோசவில் தங்களுடைய நாட்டிய நிகழ்ச்சியினை துவங்கினர்.
ரீதிகெளளை ராகத்தில் ஜதீஸ்வரம் அமைய இரு குழந்தைகளும் எதிர் எதிர் பக்கங்களாக மாறி மாறி கண்டசாபு தாளத்தை அழகுற அடவுகளால் செய்தனர்.
தொடர்ந்து அனுமத் ஜெயந்தி நாளை போற்றும் வகயைில் ராமாயண கதையின் ஒரு சில காட்சிகளை விளக்க ஆரம்பித்தன். சமுத்திரத்தில் மகேந்திர மருவத மலை கோரிக்கையிட அந்த கோரிக்கையை மறக்க இயலாமல் மலையை ஆற தடவி சென்றதும், அந்த சமுத்திரத்தில் வாழும் அரக்கி ஒருவன் தன் வாய் துவாரத்தில் சென்று இருக்க வேண்டும் என்று கூற தன் ரூபத்தை சுருக்கி சட்டென்று உள்ளுழைந்து வெளிவந்த காட்சியையும் மிக அற்புதமாக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்த்தினார்.
பாக்கியங்களை தரும் லட்சுமியை தீபத்தை கையில் ஏந்தி ஆராதித்து ஜதிகளுக்கு லட்சுமியே தன் சதங்கை குழுங்க ஒலி எழுப்பி ஆனந்த வெல்லத்தில் அனைவருக்கும் அருளிட வேண்டும் என பாக்கியநாத லட்சுமி பிரம்மா பாடல் வாயிலாக அழைத்தனர்.
தொடர்ந்து மதுர கீதம் பாடல் மாலையில் ஏழு மலையின் பெருமைகளை கூறுவதாக அமைந்திருப்பதில் ஏழாவது மலையான திருமலையில் நிகழும் கொண்டாட்டங்களை ஜெய ஜெய கோவிந்தா என ஆனந்தமாய் ஆடி, பாடிட பக்தர்கள் கொண்டாடும் காட்சியோடு கோவிந்தா நாமம் சொல்ல, ரசிகர்களின் பக்தி ஆரவாரத்தின் நடுவே ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தம்பதி சமேதராய் பவனி வர மேடையில் ஆடலும், பாடலும் நேர்த்தி கடனாக அங்க பிரதட்சணமும், நடைபெற திருமலை திருப்பதிக்கே அழைத்து சென்றனர்.
ரசிகர்களுக்கு மயிர் கூச்சலிட பக்தியில் திழைக்க வைத்த அனிதா குஹாக்கு கதே கலா ஆசார்யா பட்டமும், அபிநயங்களால் அனைவரையும் கவர்ந்த ரேஷீமாவுக்கு ககத கலாவர்தினி பட்டமும், வளரும் இளம் கலைஞரான வர்ஷாவிற்கு யுவ கலாவர்தினி பட்டமும் வழங்கிய தங்களுடைய ஜகதாலய நிகழ்ச்சியை ஸ்ரீ கணபதி ஹாலில் சிறப்பித்த குழுவினருக்கு நன்றி கூறி நிறைவு செய்தனர்.

