ADDED : ஜன 27, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே தரைப்பாலம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பலரும் கால்வாயில் குப்பை கொட்டி வருகின்றனர்.
கால்வாய் துார் வாரப்படாததால், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளாக காட்சிகளிக்கிறது. மேலும், புதர்மண்டி நீரோட்டம் தடைப்பட்டு, கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அப்பகுதியினர் துாக்கத்தை தொலைத்துள்ளனர். விஷ பூச்சிகளால் பெரிதும் அவதியடைகின்றனர்.
எனவே, கால்வாயை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

