/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை விதிமீறல் அபராதம் வசூலிப்பில் புது நடைமுறை
/
சாலை விதிமீறல் அபராதம் வசூலிப்பில் புது நடைமுறை
ADDED : பிப் 25, 2024 12:08 AM
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, போக்குவரத்து பிரிவில் புதிய நடைமுறைகளை கூடுதல் கமிஷனர் சுதாகர் அமல்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட, 'நீங்க ரோடு ராஜாவா' என்ற திட்டம், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டத்தில், பொதுமக்களால் தெரிவிக்கப்படும் புகார்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
பின், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் வீட்டிற்கே சென்று, அபராத ரசீது வினியோகிக்க உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறுகையில், 'நீங்க ரோடு ராஜாவா என்ற திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு மட்டும், தற்போது வாகன ஓட்டிகளின் வீட்டிற்கே சென்று அபராதம் வினியோகிக்கிறோம்,'' என்றார்.
இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட, 92 புகார்களில், 55 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக 22 பேரின் வீட்டிற்கு சென்று அபராதம் வசூலிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -