
அரசியல் கட்சிகளின் மரணம்
ஆசிரியர்: பலர்
பக்கம்: 190, விலை: ரூ. 250
வெளியீடு: அந்திமழை
யதேசிய, மாநில கட்சிகளின் நிலைப்பாடுகள், கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி, பிளவுகள் குறித்து 'அந்திமழை' இதழில் பலர் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இது. பா.ஜ.,- - காங்., -- தி.மு.க., -- அ.தி.மு.க., -இடதுசாரிகளைப் பற்றிய கட்டுரைகள்ய உள்ளன.
எழுதப்படாத முகங்கள்
ஆசிரியர்: மு.ஜெகன் கவிராஜ்
பக்கம்: 96, விலை: ரூ. 150
வெளியீடு: ஜகார்ட்
தென்காசியில் பிறந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்னும், பூவைச் சுற்றும் வண்டு போல சுழன்றபடி இருக்கும் மனிதர்களின் முகங்களை, எழுத்தால் ஆவணப்படுத்தி உள்ளார் ஜெகன் கவிராஜ். சாமானியர்கள், சிறுகதை நாயகர்களாய் மாறி உள்ளனர்.
தில்ரூபா
ஆசிரியர்: தொகுப்பு நுால்
பக்கம்: 152, விலை: 220
வெளியீடு: அந்திமழை
அந்திமழை இளையோர் சிறுகதை போட்டிக்கு தேர்வான 14 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. புதிய எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் வரும் ரேணுகா, கிராமத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், 'தில்ரூபா' நாடக நடிகைகளின் அவஸ்தையையும் பிரதிபலிக்கின்றன.
ஈரோடு சிறுகதைகள்
ஆசிரியர்: பொன்.குமார்
பக்கம்: 264, விலை: ரூ. 260
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்
ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களிடம் இருந்து சிறுகதைகள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இதில், மறைந்த பெரியசாமி துாரன் கதையும் இடம்பெற்றுள்ளது. இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ள தேவிபாரதி உட்பட 20 பேரின் கதைகள் அணிவகுத்துள்ளன.
தவறின்றித் தமிழ் எழுதுவோம்
ஆசிரியர்: கவிக்கோ ஞானச்செல்வன்
பக்கம்: 308, விலை: ரூ. 300
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்
நாளிதழ் படிக்கும் வாசகர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, இலக்கணத்தை எளிமையான முறையில், இலக்கிய நயத்துடன் 'தினமணி கதிர்' இதழுக்கு இவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இது, தமிழை சரியாக எழுத நினைக்கும் அனைவருக்கும் உதவும்.

