/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எண்ணுார் மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
/
எண்ணுார் மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
ADDED : ஜன 26, 2024 12:32 AM
திருவொற்றியூர், எண்ணுார், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மீனவர்கள் ராகவன், 49, கருணாகரன், 50, முருகன், 42, பாலமுருகன், 46, அருள்தாஸ், 42, அசோக் ஆகிய ஆறு பேர், குஜராத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்வதற்காக, டிச., 18ம் தேதி சென்றுள்ளனர்.
இவர்கள் ஆறு பேரும், டிச., 28ம் தேதி நள்ளிரவு, குஜராத் போர்பந்தரில் இருந்து மீன் பிடிக்க, விசைப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு மீன்பிடித்த போது, அவ்வழியாக வந்த பாகிஸ்தான் கடலோர காவல் படை அதிகாரிகள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இவர்கள் ஆறு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து அருள்தாஸின் மனைவி தனபாக்கியம், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு செயலர், சென்னை கலெக்டர், திருவொற்றியூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., சங்கர் ஆகியோரிடம், தன் கணவர் உள்ளிட்ட ஆறு மீனவர்களையும் மீட்டுத்தரும்படி, கோரிக்கை மனு அளித்துள்ளார்.

